Sorting by

×

டிட்வா புயல் பாதிப்பு: “இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

‘டிட்வா’ புயல் பாதிப்பு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (நவ.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “இந்தப் புயலின் உண்மையான தாக்கம் என்ன என்பதை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

டிட்வா புயல் - கடல் சீற்றம்
டிட்வா புயல் – கடல் சீற்றம்

புயலை எதிர்கொள்வதற்கான சரியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் நடக்கின்றன.

இன்று இலங்கை விமான நிலையத்திலிருந்து அவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். புயல் காரணமாகப் பெய்த மழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது தூத்துக்குடியில் சுவர் இடிந்து ஒருவர், தஞ்சாவூரில் சுவர் இடிந்து ஒருவர், மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி 20 வயது இளைஞர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

தமிழகத்தில் பெய்த மழையால் 56 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. கையை மீறி போகவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *