Sorting by

×

டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

புதுதில்லி: டைரக்ட்-டு-ஹோம் நிறுவனமான டிஷ் டிவி இந்தியா லிமிடெட் மார்ச் முடிய உள்ள காலாண்டில் ரூ.402.19 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் நிறுவனமானது ரூ.1,989.69 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதே வேளையில், மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15.55 சதவிகிதம் குறைந்து ரூ.343.66 கோடியாக இருந்த நிலையில் அதன் மொத்த செலவுகள் 2.16 சதவிகிதம் குறைந்து ரூ.417.16 கோடியாக இருந்தது. இதற்கிடையில் நிறுவனத்தின் சந்தா வருவாய் ரூ.295.9 கோடியாக இருந்தது. இது சுமார் 16.82 சதவிகிதம் சரிவு என்றது.

நிறுவனத்தின் விளம்பர வருவாய் 40 சதவிகிதம் குறைந்து ரூ.4.1 கோடியாக இருந்தது. இருப்பினும் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர கட்டணங்கள் மூலம் டிஷ் டிவியின் வருவாய் 2.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.35.8 கோடியாக உயர்ந்தது.

மார்ச் காலாண்டில் டிஷ் டிவியின் மொத்த வருமானம் ரூ.350.35 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு – ஆண்டு 15 சதவிகிதம் குறைந்துள்ளது. மார்ச் 31, 2025ல் முடிவடைந்த நிதியாண்டில், டிஷ் டிவியின் நிகர இழப்பு ரூ.487.66 கோடி.

நிதியாண்டு 2025ல் அதன் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 15 சதவிகிதம் குறைந்து ரூ.1,593.95 கோடியாக இருந்தது.

டிஷ் டிவியின் பங்குகள் புதன்கிழமை அன்று ரூ.5.90 ஆக முடிவடைந்தன. இது அதன் முந்தைய முடிவை விட 4.98 சதவிகிதம் அதிகமாகும்.

இதையும் படிக்க: செயில் நிகர லாபம் 11% அதிகரிப்பு

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *