நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ஒட்டுமொத்தமாக திரையரங்க வசூலாக ரூ. 91 கோடி வரை வசூலித்திருக்கிறதாம்.
ரூ. 8 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரை வசூலித்த இப்படம் இந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில் வெளியீட்டுத் தேதி!
tourist family movie worldwide collection
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


