நடிகர் தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் வணிக வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இடலி கடை ஆகிய படங்களை தனுஷ் இயக்கி வருகிறார்.
மறுபுறம், இவர் நாயகனாக நடித்த குபேரா திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
கமல்ஹாசன் – அட்லி – சல்மான் கான் கூட்டணி?
குபேராவுக்குப் பின் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிப்பார் எனத் தெரிகிறது. தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் திரைப்படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.
இதுகுறித்து பேசிய மாரி செல்வராஜ், இப்படம் சரித்திரப் படமாக உருவாகவுள்ளதாகவும் படத்தை துவங்கினால் படம் வெளியாக 1.5 ஆண்டுகளாக ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை சரித்திரக் கதையில் நடிக்காத தனுஷ் புதிய கதைக்குள் செல்வது அவருடைய ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


