Sorting by

×

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்: தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரம்

கம்பம்: தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக மாநில எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த இருமாநில அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகள் தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி அருகில் உள்ள கேரளாவுக்கு அதிகளவில் கடத்தப்படுகிறது. கேரளாவில் இந்த அரிசிக்கு கூடுதல் விலை கிடைப்பதால் இதுபோன்ற நிலை தொடர்கிறது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *