
சென்னை: திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.
பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திமுக அரசு தொடரவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும் கூட்டணி என்ற மதிமுக எடுத்த முடிவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைப்பிடிப்போம்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


