Sorting by

×

திருமணம் தாண்டிய உறவு; மனைவியைக் கொன்று செல்பி எடுத்த கணவர் – கைது செய்த போலீஸ்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

பாலமுருகன் - ஶ்ரீ பிரியா
பாலமுருகன் – ஶ்ரீ பிரியா

கடந்த சில ஆண்டுகளாக  பாலமுருகன், ஶ்ரீ பிரியா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. ஶ்ரீ பிரியா கணவருடன் பிரிந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதற்காக காந்திபுரம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி அவர் பணிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகனின் உறவினர் இசக்கி என்பவருடன் பிரியாவுக்கு திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட ஶ்ரீ பிரியா

இதுதொடர்பாக பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை இசக்கி ராஜா பாலமுருகனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து பாலமுருகன் ஆத்திரமடைந்துள்ளார்.

கோபத்தில் பாலமுருகன் இன்று காலை ஶ்ரீ பிரியா தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு சென்றுள்ளார். அந்தப் பிரச்னை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரியாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

கைது

மனைவியைக் கொலை செய்துவிட்டு, அதே இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த பாலமுருகன், அதை செல்ஃபி எடுத்துள்ளார். பிறகு அதை “துரோகத்தின் சம்பளம் மரணம்” என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதுதொடர்பாக ரத்தினபுரி காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *