Sorting by

×

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003ஆம் ஆண்டில் மதமாற்ற தடைச் சட்டத்தைக் கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

தற்போது, வழக்கில் ஆஜராகததாலும், வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததாலும், திருமாவளவனுக்கு மாவட்ட அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மீட்புப் படையினரை தவிர வயநாட்டுக்கு யாரும் வரவேண்டாம்: பினராயி விஜயன் 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *