புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 60 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக, அம்மாநில அதிகாரிகள் இன்று (மே 31) தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய பரவலில், தில்லியில் முதல்முறையாக கரோனா பாதிப்புக்குள்ளான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அம்மாநிலத்தில் தற்போது 294 பேர் கரோனா பாதிப்புக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஆனால், அந்தப் பெண் குடல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு லபாரோடோமி சிகிச்சைப் பெற்று வந்ததாகவும், அவருக்கு தற்செயலாகவே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, நாடு முழுவதும் ஒரே நாளில் 511 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது சிகிச்சைப் பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம்; பொது இடங்களிலும் அவசியம்: கேரள முதல்வர்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


