புது தில்லி: தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் முன்னோட்ட சோதனை ஜூலை 4 முதல் 11 வரை செயல்படுத்தப்படவிருக்கிறது.
ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. விமானத்திலிருந்து வான் வழியாக நிலப்பரப்பை நோக்கி செயற்கை ரசாயனங்கள் தூவி அதன்மூலம் சுமார் 90 நிமிஷங்கள் வரை செயற்கை மழைப்பொழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இற்கான உரிய அனுமதி சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருமுறை மழைப்பொழிவு செய்வதற்கான செலவு ரூ. 3.21 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு துறையும் பங்களிப்பை வழங்குகிறது. முதல்கட்டமாக வடமேற்கு தில்லி மற்றும் தில்லி புறநகர் பகுதிகளில் செயற்கை மழை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Artificial rain trial to reduce air pollution: Starts July 4!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


