Sorting by

×

தெலங்கானாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி!

தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பசமைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட அணு உலை வெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 2 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த அணு உலை வெடிப்பில் எத்தனை பேர் பலியாகினர் என்ற எந்த விவரங்களும் மாநில அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அணு உலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு நிகழும்போது கிட்டத்தட்ட 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், சில தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக அங்கு நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்தனர். உடனடியாக தீப்பிழம்புகள் கிளம்பி, தொழிற்சாலையின் சில பகுதிகளை சூழ்ந்தன. ஆலை முழுவதும் கரும்புகை வெளியேறி வருகின்றது.

சம்பவ இடத்துக்குத் தீயணைப்புப் படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களின் நிலை உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SUMMARY

Seven people are feared dead and twenty others injured after a reactor explosion at a chemical plant in the Pasamailaram industrial area of Patancheru, Sangareddy district, on Monday.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *