தெலங்கானா மாநிலம், மடக் மாவட்டத்தில் உள்ள பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலைசெய்து வந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவதால் தொழிலாளர்கள் சிலர் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
summary
12 people are feared dead and twenty others injured after a reactor explosion at a chemical plant in the Pasamailaram industrial area of Patancheru, Sangareddy district, on Monday.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


