Sorting by

×

தொடரும் மீட்புப்பணி: வயநாடு நிலச்சரிவு பலி 240-ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 240-ஆக உயர்ந்துள்ளது.

வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர், கிட்டத்தட்ட 1,000 பேரை மீட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு: பலி 163-ஆக உயர்வு; 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!

நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க பல முகமைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

வயநாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. நிலம்பூர் பகுதியில் சாலியாறு ஆற்றில் மீட்கப்பட்ட 38 பேரின் உடல்கள் மேப்பாடிக்கு கொண்டுவரப்படவுள்ளது.

மேப்பாடி பகுதியில், 8 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2-வது நாளாக தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதால், மேலும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *