Sorting by

×

நடிகர் ராஜேஷ் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி!

மறைந்த நடிகர் ராஜேஷின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ்(75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று(சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தினார். ராஜேஷின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார்.

இன்று மாலை ராஜேஷின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

நடிகர் ராஜேஷ் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி ’கன்னிப் பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாகத் தொடங்கி தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர். இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

கரோனா! வருமுன் காக்க… 6 வழிகள்!

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *