தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடி திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையின் புகாரை முன்வைத்து பரபரப்புக் குற்றச்சாட்டை கிளப்பி இருக்கிறார்.
இந்ந்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “அமலாக்கத்துறை சோதனை எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடந்தது. அந்த சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை, தமிழக போலீஸாருக்கு தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தமிழக போலீஸார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள். முறைகேடு நடந்ததா என்பதை போலீஸார் விசாரிப்பார்கள். ஆனால், நான் எந்தவித தவறும் செய்யவில்லை. தி.மு.க-வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க-வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.

தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விசாரணையில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ், தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க-வின் பி டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி, வாயில் வந்ததை பேசிக்கொண்டு வருகிறார்.
எஸ்.ஐ.ஆர் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால், வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் எதிர்க்கிறோம்” என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


