Sorting by

×

நிதீஷ் ராணா அதிரடி: 183 ரன்கள் இலக்கை துரத்திப் பிடிக்குமா சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: அதிரடியாக விளையாட எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள், தப்பு கணக்கு வேண்டாம்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நிதீஷ் ராணா அதிரடி, 183 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய நிதீஷ் ராணா அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடி அவர் ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன் பின், நிதீஷ் ராணாவுடன் கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய நிதீஷ் ராணா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 36 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் எம்.எஸ்.தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்களும் (2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), ஷிம்ரான் ஹெட்மேயர் 16 பந்துகளில் 19 ரன்களும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தனர்.

இதையும் படிக்க: குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னையா? ஷுப்மன் கில் பதில்!

சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *