Sorting by

×

நீட் முறைகேடு… குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகாா் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவமும் ஒட்டுமொத்த மாணவர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது.

வினாத்தாள் கசிவு வழக்கை பிகாா் காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய கல்வித் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) பதிவுசெய்து ஜூன் 23 விசாரணையைத் தொடங்கியது.

பூரண மது விலக்கே தீர்வு:தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

விசாரணைக்காக சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ விசாரணைக் குழுக்கள் பிகாரின் பாட்னா, கோத்ரா பகுதிகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஜெய் ஜலராம் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசாமும் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *