உச்ச நீதிமன்றத்தின் ஐந்தாவது மூத்த நீதிபதியான நீதிபதி நாகரத்னா, அக்டோபர் 29, 2027 அன்று பணி ஓய்வு பெறும் வரை, நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களைப் பரிந்துரைத்தவாறு கொலீஜியத்தில் உறுப்பினராக நீடிப்பதோடு, செப்டம்பர் 23, 2027 அன்று, இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார்.
தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில், தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய், நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி ஜே.கே மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய ஐவர் உறுப்பினர்களாக உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காகவும், பல உயர் நீதிமன்றங்கள் சார்ந்த முக்கியமான நியமனங்களை மேற்கொள்வதற்காகவும், தலைமை நீதிபதி கவாய் திங்களன்று தனது முதல் கொலீஜியம் கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொலீஜியம் முறைப்படி, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் நீதிபதிகளின் பதவி உயர்வு ஆகியவை குறித்துப் பரிந்துரை செய்வர்.
1993-ம் ஆண்டு வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, கொலீஜியம் அமைப்பு நடைமுறையில் உள்ளது.
அக்டோபர் 30, 1962-ல் பிறந்த நீதிபதி பி.வி. நாகரத்னா, முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமையாவின் புதல்வியாவார். 1987-ல் நாகரத்னா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.
அக்டோபர் 28, 1987-ல், பெங்களூருவில் வழக்கறிஞராகப் பதிவு செய்து, தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். சேவைச் சட்டம், வணிகம், காப்பீடு சார்ந்த வழக்குகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த வழக்குகளில் கவனம் செலுத்தினார்.
2008, பிப்ரவரி 18 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நாகரத்னா. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 17, 2017 அன்று நிரந்தர நீதிபதியானார்.
2021-ல் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். தற்போது, பெங்களூரு சமரச மையம் மற்றும் கர்நாடக நீதித்துறை அகாடமியின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர்!
துணிச்சலான தீர்ப்புகளுக்குச் சொந்தக்காரரான நீதிபதி நாகரத்னா, பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்தவர்.
2016-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்தவர் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என அவர் வாதிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


