பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளராக இருக்கும் சேலம் எம்எல்ஏ அருள் இன்று (ஜூன் 30) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அதிகாரம் அவருக்குதான் இருக்கிறது
” பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் ஐயா அவர்கள்தான் 45 ஆண்டு காலமாக பதவி நியமனங்களை வழங்கி வருகிறார்.
பொறுப்பாளர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் அவருக்குதான் இருக்கிறது. அன்புமணி தலைவராக இருக்கக்கூடிய இந்தக் காலக்கட்டத்திலும் இதுதான் நடைமுறை.
அன்புமணி ஐயாவிற்கு நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்றால் ராமதாஸ் ஐயாவிடம் இருக்கும் கூட்டம் விசுவாசிகள் கூட்டம்.
இந்த விசுவாசிகள் கூட்டம் அப்படியே உங்கள்(அன்புமணி) கூடவும் இருக்கும்.
ஆனால் இன்றைக்கு பதவிக்காக பெற்ற அப்பாவை விட்டு சென்றிருக்கிறாரோ என எனக்கு பயமாக இருக்கிறது. எதிர்காலத்தில் அன்புமணி அவர்கள் தவறான உதாரணமாக மாறிவிடுவாரோ? என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.
அப்பாவிற்கு மகன் கட்டுப்படவில்லை என்றால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். வாக்காளர்கள் மருத்துவர் ஐயா பின்பு இருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


