இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்த தேர்தலுக்கான பரப்புரையை பா.ஜ.க திட்டமிட்டு தொடங்கிவிட்டது. நேற்று பிரதமர் மோடி பீகாருக்குப் பயணம் மேற்கொண்டார். காரகாட்டில் நடந்த பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வரும், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது நிதிஷ் குமார் உரையாற்றும் போது, பிரதமர் மோடியைக் குறிப்பிடுவதற்கு பதிலாக பிரதமர் வாஜ்பாய் எனக் கூறி பிரதமர் மோடியின் பெயரை மறந்துவிட்டார். அதன் பிறகு அதை சுதாரித்துக்கொண்டு, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியைப் போல நாடு வளர்ச்சியடைகிறது எனப் பேசினார். நிதிஷ் குமாரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
बिहार : काराकाट में CM नीतीश कुमार मंच पर भूले PM मोदी का नाम
◆ वीडियो हुआ SM पर वायरल#PMModiInBihar | #NitishKumar | PM Modi | Bihar News | #BiharThanksModiji pic.twitter.com/K1ibDi6ZDA
— News24 (@news24tvchannel) May 30, 2025
இந்த வீடியோவுடன், ஜனவரி மாத தொடக்கத்தில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்தும் போது குமார் திடீரென கைதட்டும் வீடியோ, மார்ச் மாத தொடக்கத்தில், பாட்னாவில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்வில் தேசிய கீதத்தின் போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சிரித்து அரட்டை அடிக்கும் வீடியோ ஆகியவையும் இணைத்து வைரலாக்கப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


