பிரான்ஸ் பொதுத்தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 4.90 கோடி வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
பிரான்சில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமென அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த 7-ஆம் தேதி திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து 577 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான முதல்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 30) நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.
ஜூலை 7-ஆம் தேதி iரண்டாம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்குப் பின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து, பிரான்சில் வலதுசாரி சித்தாந்தங்களைப் பின்பற்றும் மரைன் லீ பென்னின் ‘தேசிய பேரணி கட்சி’ அதிகாரத்தை கைப்பற்றுமென்ற எதிர்பார்ப்பு பெரிதாக நிலவுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

