Sorting by

×

பிறந்த நட்சத்திரம் பலமா? பலவீனமா? பலம் கூட்டுவது எப்படி?

ஜென்ம நட்சத்திரம் என்பது ஒளி கிரகமான சந்திர பகவானின் நகர்வு கொண்டு கணிப்பது. அவர் ஒரு ராசியில் பயணிக்கும் காலம் 2.5 நாள்கள். ஒரு ஜாதக கட்டத்தில் 27 நட்சத்திரங்கள் அனைத்தும் 12 கட்டத்தில், 360 பாகையில் அமர்ந்திருக்கும். ஒரு குழந்தை பிறந்த அன்று இரண்டாவது ஒளி கிரகமான சந்திரன், 27 நட்சரத்தில் எந்த பாகையில் அமருகிறாரோ அதுவே ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜாதகத்தில் லக்கினம் என்பது சிவன், ராசி என்பது பெண் சக்தி கொண்ட அம்மன் ரூபமாக சொல்லப்படும்.

ஒருவரின் பிறந்த நட்சத்திரம் சுபம் மற்றும் அசுப தன்மை பொறுத்து அவரின் வாழ்க்கை அமையும். சந்திரன் என்பது ஒளி பிரகாசம் நம் உடலின் ஓட்டம் மற்றும் ஆற்றல் சம்பந்தம் பெற்றது. சந்திரன் அசுபத்தன்மையில் இருந்தால் நம் உடலில் உள்ள ஆற்றல் சக்தியானது குறையும். அதனால் நாம் எந்த காரியமும் திறம்பட செயல்பட முடியாது. அந்த ஒளியின் சுப தன்மையை கொஞ்சம் அதிகப்படுத்த அவரவர் ஜென்ம நட்சத்திரம் அன்று அவருக்குரிய கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.

ஜாதக ரீதியான பரிகாரம் மற்றும் குலசாமி வழிபாடு செய்வதன் மூலம், ஒருவரின் பலமற்ற ராசியை சிறிதளவு பலப்படுத்தலாம். ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தில் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நன்று. அவரின் நட்சத்திரம் பலம் பெரும் அதோடு அவரின் உயர்வுக்கு கடவுள் வழி காட்டுவார்.

“அவரவர்‌ தமக்கு உள்ள

ஆயுசும்‌ தொழிலும்‌ பொன்னும்‌

இவர்களின்‌ வித்தை செல்வம்‌

எழில்மர ணங்கள்‌ ஏழும்‌”

பிரம்மன் தன் படைப்பு தொழில் கொண்டு ஜீவ ராசிகளை ஒரு தேவ ரகசியத்தோடு உருவாக்கினார். எம்பெருமானுடைய அனுகிரகத்தை கொண்டு, படைக்குப்பொழுது நான்முகனான பிரம்மன்- ஆயுள், தொழில், பொன், வித்தை, செல்வம், எழில், மரணம் ஆகிய ஏழும் ஒரு ஜீவராசிக்கு எப்படி அமைய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறார்கள். கடவுளின் துணை கொண்டு ஒருவரின் பிறவி நோக்கம் எது என்பதை ஜென்ம நட்சத்திரம், ராசி, லக்கினம் மற்றும் அவற்றோடு தொடர்பு கொண்ட கிரகம் சொல்லிவிடும்.

ஒரு சிலர் ஜென்ம நட்சத்திரம் அன்று எதுவும் செய்ய மாட்டார்கள். ஒருசில முக்கிய செயல்களை ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம். எடுத்துக்காட்டாக அன்றாட வழக்கமான செயல்கள், கல்வி, தொழிலில் முயற்சி, பதவி ஏற்பு, வீட்டில் ஹோமம், சொத்து வாங்கும் முயற்சி, பிறந்தநாள் விழா, குழந்தைகளுக்கு முதல் அன்னப்பிரசன்னம் வழங்குதல், உபநயணம், அன்னதானம், உடை தானம், போன்றவற்றை தாராளமாக ஜென்ம நட்சத்திரத்தில் செய்யலாம். ஆங்கில தேதி தவிர்த்து, முடிந்தவரை நாம் ஜென்ம நட்சத்திரம் அன்றுதான் பிறந்த நாளை கொண்டாடுவது நன்று. முக்கியமாக ஒருவர் சுப செயல் செய்யும் முன் அவரவர் நட்சத்திரம் கொண்டு தாரா பலன் பார்க்க வேண்டும்.

அவரவர் ஜென்ம நட்சத்திரம் அன்று தவிர்க்க வேண்டிய சில காரியம் உள்ளது. ஒருவரின் பிறந்த நட்சத்திரம் உடல், மற்றும் லக்கினம் உயிர் என்று பிரிக்கப்படும். உடல் பாதிப்பு என்பது நோய் மற்றும் மனம் பிரச்சனை குறிக்கும். ஒருவரின் நோய் குணப்படுத்தும் சிகிச்சை, முதன்முறை மருந்து உட்கொள்ளும் நேரம், அறுவை சிகிச்சை முதலியன ஜென்ம நட்ச்சரத்தில் தவிர்ப்பது நல்லது. அதுவே அவசரம் சிகிச்சை என்றால் தவிர்க்க முடியாது. ஒருவர் வீட்டில் நடைபெறும் கிரக பிரவேசம், திருமணம், சாந்தி முஹூர்த்தம், புது துவக்க செயல் மற்றும் சுப காரியங்கள் அனைத்தும், அவரர் ஜென்ம நட்சத்திரத்தில் செய்யக்கூடாது.

கோட்சாரமும் ராசியும்

சுபகாரியம் துவங்க ஜென்ம நட்சத்திரம் மட்டும் பார்க்க முடியாது மற்ற கிரகங்களின் நகர்வுகளையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும். பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 8வது நட்சத்திரம் வரும் காலம் நல்ல நாள்கள் அல்ல. கோச்சாரப்படி ராகு அல்லது கேது ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது, அவர் ஒரு இக்கட்டானா சூழ்நிலை, ஏமாற்றம், தலைக்குனிவு என்று பல்வேறு தடங்கல் ஏற்படும். அதனால் அக்காலகட்டத்தில் திருமணம், புது தொழில் மற்றும் சுப செயலை செய்யாமல் இருப்பது நன்று. ஆனால் அன்றாட செயல்களை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக சந்திர கிரகண காலகட்டத்தில், கர்ப்பமான பெண்கள், வீட்டை விட்டு வெளியில் வராமல், எந்த செயலையும் செய்யாமல் பெரியவர்கள் பார்த்து கொள்வார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சந்திர கிரக ஒளியை மாய இருள் கவ்வும் பொழுதும் இதே அசுப நிலை ஏற்படும்.

சுபம் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது திருமண நிகழ்வு. ஆண் – பெண் இருவருக்கும் ஜென்மம் நட்சத்திரம் மற்றும் ஜென்ம மாதத்தில் அன்று திருமணம் செய்யமாட்டார்கள். அது தவிர 12 ஆகாத நட்சத்திரங்களான பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் நட்சத்திரங்கள் முகூர்த்திற்கு ஏற்ற நாள்கள் அல்ல. பொதுவாக கிருஷ்ண பக்ஷம் காலம், ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்கள், அஷ்டமி, நவமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தசி திதிகள், திரிதின ஸ்பிரிக், அவமா மற்றும் குருட்டு நாட்கள் (சனி, ஞாயிறு, செவ்வாய்) முகூர்த்தம் தவிர்ப்பது நல்லது. இவை அனைத்தும் பொதுவாக தெரிந்து கொள்ளவேண்டியவை.

இன்னும் முகூர்த்தம் குறிக்க பல்வேறு கணக்குகள் உள்ளன. தமிழ் காலண்டரில் குறிப்பிடும் சுப முகூர்த்தத்தை மட்டுமே பார்க்கக் கூடாது, அதோடு அவரவர் ஜாதகப்படி சுப நிகழ்ச்சிகளை குறிக்கவேண்டும். முக்கியமானது ஜென்ம நட்சத்திரத்தை கொண்டு தாராபலன், தசாபுத்தி, அன்றைய கோட்சாரம் மற்றும் சந்திர பலம் கணித்து சுப காரியத்தை துவங்குவது நல்லது.

“சந்திர காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்”

சந்திரன் பலம் குறைவு உள்ளவர்கள் இந்த மந்திரத்தை சொல்லலாம். திங்கட்கிழமை நாள்களில் காலை சந்திரமௌலீஸ்வரர், சந்திரன் வழிப்பட்ட ஸ்தலம், பழம் பெரும் சிவன் ஆலயங்கள் செல்வது மற்றும் ராகு காலத்தில் அம்பிகைக்கு விளக்கு ஏற்றுவது சிறந்தது.

வாட்ஸ்ஆப்: 8939115647

vaideeshwra2013@gmail.com

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *