வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இது வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30-க்கு ‘ஃபென்ஜால்’ புயல் உருவானது. புயல் உருவாவாதில் சில குழப்பங்கள் இருந்ததால் அதுபற்றிய மாறுபட்ட தகவல்கள் வெளியானது. ஆனால், இப்போது ஏற்கெனவே கணித்தபடி புயல் சின்னம் தீவிரமடைந்து ‘ஃபென்ஜால்’ புயலாக உருவாகிவிட்டது. தமிழக கடல் பகுதிக்குள் நுழைந்ததும் வேகம் எடுத்து புயலாக மாறிவிட்டதால் இனி அது புயலாகத்தான் கரையை கடக்கும்.
இந்தப் புயல் நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான ‘ஃபென்ஜால்’ புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இதையும் படிக்க | புயல் எதிரொலி: 18 விமானங்கள் ரத்து!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வங்கக் கடலில் உள்ள ‘ஃபென்ஜால்’ புயல் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை மரக்காணம்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கக் கூடும்.
புயல் கரையை நெருங்கும் போது தாமதம், தாமதமாக சென்னை மற்றும் புறநகர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


