Sorting by

×

பெண்கள் விடுதி கழிப்பறையில் கேமரா.. மாணவிகள் போராட்டம்! பொறியியல் மாணவர் கைது!

ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குட்வல்லேரு பொறியியல் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியின் கழிப்பறையில் ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியின் கழிப்பறையில் கேமரா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.

இந்த நிலையில் பெண்கள் விடுதிக்குள் கேமராவில் பதிவான விடியோ காட்சிகள், மாணவர்களிடையே பரவிய சம்பவமும் மாணவிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா ரூ.15 கோடி நிதியுதவி: சத்தீஸ்கர் முதல்வர்!

இச்சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் விடுதி வளாகத்தில் ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதேக் கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு பொறியியல் மாணவரான விஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து லேப்-டாப் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

விஜய்யின் லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் விஜய்யின் லேப்-டாப்பில் கிட்டத்தட்ட 300 விடியோக்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், விஜய் பதிவு செய்த விடியோக்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவமும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *