
சென்னை: விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளைபோல நாம் அனைவரும் பெண் கல்வி, ஏழை மகளிர் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி கூறினார். விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளை சார்பில், பத்மஸ்ரீ விருதுபெற்ற ஸ்தபதி தேவ.ராதா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை பெரியார் நகரில் நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.வித்யாதரன் தலைமை வகித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி,ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணனை கவுரவித்தார். தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் ஏராளமான பெண் பயனாளிகளுக்கு கல்வி, மருத்துவ உதவித்தொகை, கண் கண்ணாடி, தையல் இயந்திரங்களை வழங்கினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


