Sorting by

×

பொறியியல் கலந்தாய்வு- 2.74 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த 25 நாள்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும், 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கடந்த ஆண்டைவிட தற்போதே 2.74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பாஜகவில் இணைந்தார் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்

இதைப் பார்க்கையில் மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பிற்கான ஆர்வம் மீண்டும் அதிகரித்திருப்பது காட்டுகிறது. தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இக்கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *