Sorting by

×

போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த மன்மோகன் மறைவை அரசு பயன்படுத்துகிறதா? – சிஐடியு

சென்னை: “போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை அரசு பயன்படுத்துகிறதா?” என சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் விடுத்த அறிக்கையில், “போக்குவரத்து ஊழியர்களுக்கான கடந்த பேச்சுவார்த்தையும் ஊதிய ஒப்பந்தம் முடியும் காலத்தில் தான் பேசப்பட்டது. அந்த ஒப்பந்தம் முந்தைய ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்தை உருவாக்க அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *