மகாராஷ்டிர பேரவைத் தேர்தலிலும் மகா விகாஸ் அகாதி கூட்டணிஇணைந்து போட்டியிடும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனை (உத்தவ் தாக்கரே) கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதேநேரத்தில், பாஜக கூட்டணியில் 4 தொகுகளில் போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனிடையே மகாராஷ்டிர மாநில பேரவைத் தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிர பேரவைத் தேர்தலிலும் மகா விகாஸ் அகாதி கூட்டணிஇணைந்து போட்டியிடும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிர மாநில பேரவைத் தேர்தல் மீது எங்கள் பார்வை உள்ளது.
தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சிவ சேனை (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடும். மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. விரைவில் தொடங்கும். ஆனால், இந்த மூன்று கட்சிகளைப் போலவே, இடதுசாரிக் கட்சிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவையும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தன.
அவர்களுக்கு மக்களவையில் சீட் கொடுக்க முடியவில்லை. இந்த கட்சிகளின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் தார்மீக பொறுப்பு என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

