Sorting by

×

மக்கள் எண்ணம் நம் பக்கம்; அதீத நம்பிக்கை வேண்டாம்: சோனியா காந்தி

புது தில்லி: மக்கள் எண்ணம் நம் பக்கம்தான் உள்ளது, ஆனால், அதற்காக மனநிறைவு மற்றும் அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியா காந்தி அறிவுரை வழங்கியிருக்கிறார்.

முக்கிய சில மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம், சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மக்களின் எண்ணம் தற்போது நம் பக்கம்தான் உள்ளது, மக்களவைத் தேர்தலின்போது மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட நற்மதிப்பு மற்றும் உறுதித்தன்மையை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்

தற்போது கிடைத்திருப்பதை நினைத்து நாம் மனநிறைவை அடையக் கூடாது, அதீத நம்பிக்கையும் வேண்டாம், நாம் மிகச் சிறப்பாக செயல்பட்டால், நிச்சயம் அது அரசியலில் எதிரொலிக்கும், உதாணரமாக மக்களவைத் தேர்தலை எடுத்துக்கொள்ளலாம், தேசிய அரசியலிலும் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்றார் சோனியா.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை, மக்களை இன ரீதியாக பிரிப்பது மற்றும் மக்களிடையே அச்சம் மற்றும் வன்முறையை பரப்புவது போன்ற கொள்கைகளை மாற்றிக்கள்ளவில்லை என்றும் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.

கான்வர் யாத்திரையின் வழிப்பாதைகளில் இருக்கும் உணவகங்கள், உரிமையாளர்களின் பெயரை வெளியிட வேண்டும் என்று உத்தரப்பிரதேச மற்றும் உத்தரகண்ட் அரசுகள் வெளியிட்ட அறிவிப்பை நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு சரியான நேரத்தில் நிறுத்தியது, ஆனால், இது வெறும் தற்காலிகமானதுதான் என்றார்.

நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையே மாறியது: மக்கள் கண்ணீர்

நாட்டில் உள்ள நான்கு மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது, கட்சித் தலைவர்கள், தற்போது பெற்றிருக்கும் நன்மதிப்பை நீடிக்கவும், மக்களிடையே நம்பிக்கையை பெறவும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று கட்சித் தலைவர்களை வலியுறுத்தியிருக்கிறார்.

ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு -காஷ்மீருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. இதனை முன்னிட்டு, இன்று காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் பேசிய சோனியா, மத்திய பட்ஜெட் குறித்தும் கடுமையாக விமரிசித்திருந்தார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *