Sorting by

×

மதுபோதையில் படுத்து தூங்கிய கண்டக்டர்… நடுவழியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து – பயணிகள் ஷாக்!

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து [ வழித்தட எண்-51 ] சுற்றுவட்டாரக் கிராமங்கள் வழியாக சோளிங்கர் பேருந்து நிலையத்துக்கு மகளிர் கட்டணமில்லாத அரசுப் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 5 நடைகள் இந்த பேருந்து சென்று திரும்ப வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள்தான் அதிகமாக இந்த பேருந்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தினமும் மாலை 3 மணிக்கு காவேரிப்பாக்கத்தில் இருந்து புறப்பட வேண்டிய பேருந்து, நேற்றைய தினம் மிகத் தாமதமாக 3.40 மணிக்குத்தான் புறப்பட்டிருக்கிறது.

மதுபோதை

பேருந்தில் பெண் பயணிகள் அதிகமாக பயணம் செய்தனர். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்குள் கண்டக்டர் தட்டுத்தடுமாறி டிக்கெட் கொடுத்துக்கொண்டு வந்தார். அவர்மீது `மது’ வாடை அடித்ததால், பெண் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். நிற்க முடியாத அளவுக்கு மது குடித்திருந்தார்.

பயணிகள் இது குறித்து சத்தம் போடவே… வழித்தடத்திலுள்ள மாங்காளி அம்மன் கோயில் அருகே பேருந்தை நிறுத்தச் செய்த கண்டக்டர், கீழே இறங்கிப்போய் கோயில் வளாகத்தில் நீண்டு படுத்துக்கொண்டார். பயணிகளும் கீழே இறங்கிச் சென்று கண்டக்டரை எழுப்ப முயன்றனர். அவர் எழுந்திருக்காததால், அரை மணி நேரத்துக்கும் மேலாக கால்கடுக்க காத்துக்கொண்டிருந்தனர்.

மதுபோதை

கடைசிவரை கண்டக்டர் எழுந்திருக்கவே இல்லை. அவரை திட்டித்தீர்த்த பெண்களும், மாணவிகளும் ஆட்டோ பிடித்தும், லிஃப்ட் கேட்டும் தங்களின் கிராமங்களைச் சென்றடைந்தனர். சுமார் 1 மணி நேரம் கழித்து, சோளிங்கர் பணிமனையில் இருந்து ஊழியர்களை வரவழைத்த டிரைவர், அவர்கள் உதவியுடன் கண்டக்டரை தூக்கி பேருந்துக்குள் படுக்க வைத்து பயணிகள் இல்லாமலேயே வெறிச்சோடிய நிலையில் பேருந்தை சோளிங்கருக்கு ஓட்டிச்சென்றிருக்கிறார். “கண்டக்டர் மதுபோதையில்தான் அலப்பறை செய்தார்’’ என்று ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறையினரும், மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *