
மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கி.மீ. தொலைவுக்கு `ரோடு ஷோ' செல்கிறார். நாளை திமுக பொதுக் குழுவில் பங்கேற்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதியம் 12 மணியளவில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, எம்.மணிமாறன் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


