Sorting by

×

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! திமுகவினர் உற்சாக வரவேற்பு!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் அண்ணா அறிவாலயம் முகப்பு போன்று வடிவமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுக்கும் முதல்வர், மாலையில் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலையில் இருந்து தொடங்கி சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பேரணி நடத்துகிறார்.

முன்னதாக, ‘2026 தேர்தல் களத்தில் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை’ என்று திமுக பொதுக்குழு கூட்டம் ஏற்பாடுகள் குறித்த ஒரு விடியோவை முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்தாண்டு தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் இந்த மதுரை பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | இந்தியா – பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்கா காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *