
மதுரை: மதுரையில் அண்ணா அறிவாலய முகப்புடன் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் திமுக பொதுக்குழு நாளை (ஜூன் 1) கூடுகிறது. பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு சைவ, அசைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக மதுரை உத்தங்குடியில் கலைஞர் திடலில் சென்னை அண்ணா அறிவாலயம் போல் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் முன்பு செயற்கை புல்வெளிக்கு மத்தியில் நூறு அடி உயர கொடிக் கம்பம், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் சிலைகளும், ஸ்டாலின், உதயநிதி கட்-அவுட்களும் அமைக்கப்பட்டுள்ளன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


