Sorting by

×

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுத்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மவுனம் காப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சொத்து வரியைக் குறைத்து முறைகேடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உட்பட 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும், மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகங்களில் நீண்ட காலம் வருவாய்ப் பிரிவு கணினி தொழில்நுட்பங்களைக் கையாண்ட முக்கிய ஊழியர் ஒருவரையும், மண்டலத் தலைவர்கள் சிலரையும் போலீஸார் விசாரணைக்கு அழைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *