மதுரை: அழுகை அடங்கி சிரிப்பு சப்தம் கேட்கிறது! மருத்துவமனையா? அல்லது குழந்தைகள் ஓடியாடி விளையாடும் பூங்காவா? எனச் சொல்லுமளவுக்கு காண்போரை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு, வண்ணமயமாகவும், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்காவாகவும் அமைந்துள்ளது.
பொதுவாக தனியார் காப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் அச்சத்தைப்போக்கி குதூகலத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களை கவரவும் குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுகள் வண்ணமாயமாகவும், குழந்தைகள் விளையாடும் உபகரணங்களுடனும் அமைக்கப்பட்டிருக்கும்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

