Sorting by

×

மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு; மாயமான மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த சென்னை தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கடலில் குளித்த நிலையில், கடல் அலையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும், கடலில் மாயமான 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் பயிலும் 17 மாணவர்கள், மாமல்லபுரம் பகுதிக்கு இன்று (ஆக.30) சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றுபார்த்த அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்புறம் உள்ள கடலில் குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கிய சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ரோஷன்(21) என்பவர் கடல் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *