நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் திரைப்படம் ஹிந்தியில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பெற்றிருந்தார்.
பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர் விலக, தியாகராஜனே இப்படத்தை இயக்கினார்.
அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர்.
சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. இறுதியாக ஆக.2 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
வயநாடு நிலச்சரிவு: நிவாரணப் பணியில் நிகிலா விமல்!
இந்த நிலையில், மீண்டும் இப்படத்தின் வெளியீடு தள்ளிச்சென்று வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

