சென்னையில் தங்கம் விலை இன்று ரூ.640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களில் சற்று குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
அதன்படி, சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.640 உயர்ந்து ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.6,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.96.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி 96,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.