Sorting by

×

மும்பை பல்கலைக்கழகத் தேர்தல்: பாஜகவின் ABVP படுதோல்வி.. சிவசேனா கட்சியினர் 10 பேர் வெற்றி!

மும்பை பல்கலைக்கழகத் தேர்தல்..

மும்பை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த கோர்ட் தடைவிதித்து இருந்தது. சமீபத்தில் அத்தடையை மும்பை உயர் நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து தேர்தல் நடத்தப்பட்டது.

இத்தேர்தலில் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் சிவசேனா (உத்தவ்)வின் இளைஞரணி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். இதில் மொத்தமுள்ள 10 உறுப்பினர்கள் பதவிகளையும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பெற்று சாதனை படைத்திருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்று கருதித்தான் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் வாக்காளர்கள் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக கூறி தேர்தலுக்கு கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கி வைத்திருந்தார்.

ஆதித்ய தாக்கரே“ஆமாம், எனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க விரும்புகிறேன்!” – உத்தவ் தாக்கரே ஓப்பன் டாக்

`இது தொடக்கம் தான்’ – ஆதித்ய தாக்கரே

இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயும், அவரது உறவினர் வருண் சர்தேசாயும் முக்கிய பங்கு வகித்தனர். வருண் சர்தேசாய் இத்தேர்தலில் கடுமையாக உழைத்ததன் பயனாகவே அனைத்து இடங்களையும் உத்தவ் தாக்கரே கட்சி பெற்று இருக்கிறது.

எனவே வருண் சர்தேசாயை வரும் சட்டமன்ற தேர்தலில் மும்பை பாந்த்ரா கிழக்கு தொகுதியில் நிறுத்த உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். தற்போது இத்தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆனால் அவர் தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) கட்சியில் சேர்ந்துவிட்டார். எனவே பாந்த்ரா(கிழக்கு) தொகுதியை எடுத்துக்கொண்டு அதற்கு பதில் வேறு ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை பல்கலைக்கழக தேர்தலில் வெற்றி பெற்ற 10 பேரும் உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்ய தாக்கரேயை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் பேசிய ஆதித்ய தாக்கரே, “இது தொடக்கம் தான். வரும் சட்டமன்ற தேர்தலில் இது போன்ற வெற்றியை பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே `749 நீதிபதிகளில் 651 நீதிபதிகள் சொத்து விபரங்களை பதிவிடவில்லை’ – வெளியான தகவல்

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி செயலாளர் சங்கல்ப் பல்தேசாய் இத்தேர்தல் குறித்து பேசுகையில், ”தேர்தலில் வெற்றி பெற நாங்கள் தீவிரமாக உழைத்தோம். ஆனால் சில இடங்களில் தவறு நடந்துவிட்டது. அதனை சரி செய்வோம்” என்றார். இத்தேர்தல் வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கு கிடைத்திருக்கும் ஊக்கமாக உத்தவ் தாக்கரே கருதுகிறார்.

மும்பையில் செல்வாக்கு யாருக்கு?

அதோடு உத்தவ் தாக்கரேவுக்கு தொடர்ந்து மும்பையில் செல்வாக்கு இருக்கிறது என்பதை இத்தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசியல் விமர்சகர் குமார் சப்தஸ்ரீ மேலும் கூறுகையில்,”பா.ஜ.க இளைஞர்களை கவரத்தவறிவிட்டது. படித்த மராத்தியர்களை கவரவும், தேர்தல் நிர்வாகத்தை சரியாக கையாள்வதிலும் பா.ஜ.க தோல்வி அடைந்துவிட்டதையே இது காட்டுகிறது. ஏற்கெனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமேலவை பட்டதாரிகள் தொகுதியிலும் பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்து உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இப்போது மும்பை பல்கலைக்கழகத் தேர்தலிலும் பா.ஜ.க அடியோடு தோல்வியை சந்தித்து இருப்பது வரும் சட்டமன்ற தேர்தலில் மும்பையில் பா.ஜ.க விற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

வருண் சர்தேசாய்Udhayanidhi Stalin: `அரசியலில் விருப்பம் இல்லை’ To `துணை முதல்வர்’ – உதயநிதியின் அரசியல் பயணம்

மும்பை மாநகராட்சி தேர்தல் என்பது மும்பையில் மட்டும் நடப்பது கிடையாது. மும்பை பல்கலைக்கழகத்தோடு சேர்ந்திருக்கும் 850 கல்லூரிகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் இதில் வாக்களித்து இருக்கின்றனர். இந்த கல்லூரிகள் ரத்னகிரி, சிந்துதுர்க் வரை உள்ளது. அதாவது 12 மக்களவை தொகுதியில் இக்கல்லூரிகள் இருக்கிறது.

இது அரசியல் ரீதியிலான தேர்தல் இல்லை என்றாலும், இத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க விற்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. சிவசேனாவை பா.ஜ.க முன்னின்று உடைத்தது. அப்படி உடைத்த பிறகும் பா.ஜ.கவால் சிவசேனாவின் வாக்குகளை தங்கள் வசம் கொண்டு வர முடியவில்லை. இத்தேர்தல் முடிவு தாக்கரே தரப்புக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது”என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *