Sorting by

×

மூலனூரில் அரியவகை ஆந்தை மீட்பு

மூலனூரில் அரியவகை ஆந்தை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரைச் சோ்ந்த சரவணன், தாராபுரம் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலையோரத்தில் ஒரு வித்தியாசமான பறவையை காக்கைகள் கொத்திக்கொண்டிருந்தன.

இதையடுத்து அவா் காங்கயம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த வனக் காப்பாளா் சரவணன் அதனை மீட்டு, அரியவகை ஆந்தை என்று தெரிவித்தாா்.

மேலும், ஆந்தைக்கு கால்நடை மருத்துவா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, மூலனூா் அருகிலுள்ள மணிமலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *