சென்னை: மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள ‘மெட்ரிகுலேஷன்’ என்ற வார்த்தையை நீக்கி, தனியார் பள்ளி என பெயர் வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

