Sorting by

×

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,828 கன அடியிலிருந்து வினாடிக்கு 16,493 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.65 அடியிலிருந்து 118.66 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 91.35 டிஎம்சி யாக உள்ளது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அன்னிக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது

இதையும் படிக்க | ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *