Sorting by

×

மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் 1.75 லட்சம் கன அடியாக அதிகரிக்கலாம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1.75 லட்சம் கன அடியாக மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு, கடந்த 16-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.76 அடியை எட்டியபோது, டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி நீர் திறக்கப்பட்டது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *