
சென்னை: சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 33,869 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழகத்தில் ‘சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்’ கடந்த 2023 ஜூலை 10-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்தந்த கிராமத்திலேயே சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கிராம சுகாதார செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்களை கொண்டு, துணை சுகாதார நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


