Sorting by

×

’மோடி அமைதியோ அமைதி..!’ கேலிச்சித்திரம் வெளியிட்டு காங். கண்டனம்

நீட் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதி காப்பதாக, மோடியை கிண்டலடித்து காங்கிரஸ் கேலிச்சித்திரம் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

Modi On Mute Mode pic.twitter.com/Exat0UkN9o

— Congress (@INCIndia) June 29, 2024

காங்கிரஸ் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் தேர்வித்தாள் கசிய விடப்பட்டதால் நாட்டிலுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் அபாயத்தில் உள்ளது.

24 லட்சம் இளைஞர்களின் கடின உழைப்பு, அவர்களின் குடும்பங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணம், அவர்களின் கனவுகள், நம்பிக்கைகள் ஆகிய இவையெல்லாம் சுக்கு நூறாய் உடைந்துள்ளன… ஆனால் நரேந்திர மோடி அமைதியாக உள்ளார்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீதி கேட்டு வீதிகளில் திரண்டுள்ளனர். ஆனால், இதைக் குறித்து, நரேந்திர மோடி கவலைப்படவே இல்லை.

NEET पेपर लीक में देश के लाखों युवाओं का भविष्य दांव पर लगा है।

24 लाख युवाओं की दिन-रात की मेहनत, परिवार के खून-पसीने की कमाई, सपनें, उम्मीदें सब बिखर रहे हैं.. लेकिन नरेंद्र मोदी खामोश हैं।

हजारों युवा सड़कों पर उतरकर न्याय मांग रहे हैं, अपनी मेहनत का हिसाब मांग रहे हैं..… pic.twitter.com/rjowoL24Cr

— Congress (@INCIndia) June 29, 2024

அதேவேளையில், இளைஞர்களுக்கு நீதி கேட்டு மக்கள் தலைவர் ராகுல் காந்தி நீட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது அவருடைய ஒலிப்பெருக்கி அணைக்கப்படுகிறது.

மோடியின் அமைச்சர்கள் வெட்கமின்றி ‘நீட் விவகாரம் நாடாளுமன்ற மாண்புக்கு நல்லதல்ல’ என்று பேசுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *