Sorting by

×

ராஜேஷ் – ஜீவா கூட்டணியில் புதிய படம்!

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ஜீவாவுக்கு இறுதியாக பிளாக் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, பிளாக் பட இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா – ராஜேஷ் கூட்டணி குறித்த தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.

இதையும் படிக்க: ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மோகன்லால்!

reports suggests actor jiiva acts in director rajesh movie

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *