Sorting by

×

ராமச்சந்திரன்: முதலில் வனத்துறை, பின் சுற்றுலா, இப்போ கொறடா… பதவி பறிப்பு, புதிய பொறுப்பு பின்னணி

அமைச்சர் டு கொறடாராமச்சந்திரன்

ராமச்சந்திரன், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள இளித்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், தி.மு.க – வின் சீனியர் நிர்வாகியாக இருந்து வருகிறார். மாவட்ட செயலாளர் முதல் கருணாநிதி அமைச்சரவையில் கதர் வாரியத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்த தொகுதியான குன்னூர் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க தரப்பில் களம் இறக்கப்பட்ட அதே படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த வினோத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். சொந்த ஊர் மற்றும் சொந்த சமுதாய மக்களிடம் இவர் பெற்ற வாக்குகள் சொற்பம் என்றாலும் குன்னூர் நகர் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் ஆதரவால் வெற்றியை அடைய முடிந்தது.

ராமச்சந்திரன்

ஸ்டாலின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் ராமச்சந்திரனுக்கு வனத்துறை வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமான நீலகிரியைச்‌ சேர்ந்த ஒருவருக்கு வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், வனத்துறை அமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே தனது மருமகனின் எஸ்டேட்டில் அத்துமீறல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. வனத்துறை அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி காட்டை அழித்து, மருமகனின் எஸ்டேட்டற்கு சாலை அமைத்த விவகாரம் வனத்துறை அமைச்சர் பதவிக்கே பங்கம் விளைவித்தது. தொடர்ந்து மதிவேந்தன் – ராமச்சந்திரன் வசம் இருந்த துறைகள் பரஸ்பரம் மாற்றப்பட்டது.

தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சராக வலம் வந்துக் கொண்டிருந்த நிலையில், அந்த பதவியும் தற்போது பறிக்கப்பட்டு, அரசு கொறடாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பதவி பறிப்பு பின்னணி

வனத்துறை, சுற்றுலா, கொறடா என 73 வயதிலும் ராமச்சந்திரன் பந்தாடப்படுவது குறித்து நம்மிடம் பகிர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், ” அமைச்சர் ராமச்சந்திரன் அணி மாவட்ட செயலாளர் முபாரக் அணி என நீலகிரி தி.மு.க. வில் இரண்டு அணிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நாங்கள் பல காலமாகவே அமைச்சர் அணியில் தான் இருக்கிறோம். வெளிப்படையாகவே அமைச்சர் ஆதரவாளராக இருந்து வருகிறோம். முக்கியமான பொறுப்பிலும் இருக்கிறோம். இந்த முறை அமைச்சரின் செயல்பாடு அனைவருக்குமே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராமச்சந்திரன்

அமைச்சரானதும்‌ கட்சியை மறந்துவிட்டார். கட்சி நிகழ்ச்சிகளை நடத்தவில்லை என்றாலும் மாவட்டம் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், எம்.பி ஆ. ராசாவே அமைச்சர் மீது கடுப்பில் இருந்தார். மாவட்ட செயலாளர் அதற்கு மேல் காட்டமாக இருந்தார்.

கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை யாரையும் மதிக்கவில்லை. தொண்டர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் பங்கேற்று அவர்களுக்கு 500, 1000 ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதிகாரிகள் முன்னிலையில் கட்சியினரை அவமானப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதேவேளையில், வேலை வாய்ப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்களை தனது சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார். மற்ற மக்களுக்கு பாகுபாடு காட்ட ஆரம்பித்தார். இளம் படுகர் சங்கம் எனப்படும் சமுதாய சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். இதில் கட்சி தலைமை எச்சரிக்கவே வாபஸ் வாங்கினார்.

ராமச்சந்திரன்

மருமகனின் எஸ்டேட் விவகாரம், உள்ளாட்சி தேர்தல் தலையீடு, கான்ட்ராக்டர்கள் தேர்வு, மேடைகளில் சர்ச்சை பேச்சு என இன்னும் பல புகார்கள் உளவுத்துறை ரிப்போர்ட்டாக முதல்வர் மேஜைக்கு செந்ன்றுகொண்டேஇருந்தது. அதன் விளைவே இந்த பதவி பறிப்பு. எனினும் மேற்கு மண்டலத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தற்போது கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி காலியாகும் என ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்றாலும், கொறடா பதவி வழங்கியது யாரும் எதிர்க்கவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *