Sorting by

×

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

ரோஹித் சர்மா அதிரடி; 229 ரன்கள் இலக்கு

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். மும்பை அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. இருப்பினும், அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் ஹார்திக் பாண்டியா 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் கிஷோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *