இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கவுள்ள படத்தில் நடிகை ரச்சிதா ராம் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.
கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கைதி – 2 படத்தை இயக்குகிறார்.
இதற்கிடையே, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் லோகேஷுக்கு ஜோடியாக கூலியில் நடித்து பிரபலமான நடிகை ரச்சிதா ராம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: வடசென்னை 2 அப்டேட் – வெற்றிமாறன் அறிவிப்பு!
reports suggests actor rachitha ram plays pair to lokesh kanagaraj
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


