வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரியாயு சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்து ரூ. 1,980.50-க்கு விற்பனையாகிறது. ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.
இதையும் படிக்க: மகாராஷ்டிர புதிய அரசு டிச. 5-இல் பதவியேற்பு
இந்த நிலையில், தொடர்ந்து 5-ஆவது மாதமாக ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ. 16 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,980.50-ஆகவும், மும்பையில் ரூ.1,771.00-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,927.00-ஆகவும், புதுதில்லியில் ரூ.1818 ஆகவும் விற்பனையாகிறது.
அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


